Shraadhdham

7 months ago 45
அது ஒரு அழகிய அக்ரஹாரம். சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். கிழக்கில் சிவன் கோவில். மேற்கில் பெருமாள் கோவில். வாய்க்காலில் எப்போதும் ஜலம் ஓடிக் கொண்டிருக் கும். வயல், விவசாயம்,தென்னை,
மாமரங்கள் என ஊரே குளு குளு என இருக்கும். பத்து மைலில் திருநெல்வேலி டவுன். நாள், கிழமை, சுவாமி புறப்பாடு, திருநாள். எதற்கும் குறைவில்லை. பிரச்சினை இல்லாத
பிராமண சமாஜம். அதோ மேற்கில் ஒரு
ஆத்தில், சாஸ்திரிகள் பரபரப்பாக இருக்கிறார். வாருங்கள் என்ன என்று பார்ப்போம். கதை அங்குதான் தொடங்குகிறது.
சாஸ்திரிகளே, மணிபத்து ஆகிவிட்டது. ஸ்ரார்த்தத்திற்கு ஒரு பிராமணாள் வந்துட்டார். மணி மாமா இன்னும் வல்லியே. கர்த்தா பாலு ஐயர் கவலைப் படுகிறார்‌‌. அவர் அம்மா திடீரென கீழே விழுந்து, ஆஸ்பத்திரியில் இருக்காராம். மன்னிச்சுக்குங்கோ வர தோது இல்லை
அப்படீன்னு சொல்றார். பத்தரை
மணிக்கு எந்த பிராமணாள் கிடைப்பா.. இவ்வளவு பெரிய அக்ரஹாரத்தில் ஐந்தாறு பேர் தான் பிராமணார்த்தம் சாப்பிட வரா‌. என்ன பண்றதுனு ஒண்ணும் புரியலை. வாத்யார்
கைகளைப் பிசைகிறார்‌.
மாமா, ஒரு நிமிஷம் கர்த்தாவின் மனைவி வாத்யாரைக் கூப்பிட,
சொல்லுங்கோ மாமி என்கிறார் வாத்யார் சீனு. நாலு அகம் தள்ளி
புதுசா ஒரு ஃபேமிலி வந்திருக்கா. அவாத்து மாமா டெய்லி இந்த டயத்தில் பஞ்ச கச்சம் கட்டிண்டு காரில் ஏறி
எங்கேயோ போறார். அவர்கிட்ட வேணா கேட்டுப் பார்க்கலாம்.
"அவரே ஊருக்கு புதுசு.. அவர்கிட்ட எப்படி..." வாத்யார் இழுக்க, " சும்மா கேட்டுத்தான் பாருங்கோ..காசா.. பணமா" மாமி உசுப்பி விட வாத்யார் அரை மனதுடன் கிளம்புகிறார்.
" மாமா.. மாமா" என வாத்யார் அந்தப் புதியவர் ஆத்தில் கூப்பிட, உள்ளிருந்து
பட்டை விபூதி, பஞ்ச கச்சத்துடன் அவர் வெளியே வருகிறார்.வாங்கோ..உள்ளே வாங்கோ என வாத்யாரை அழைத்து
உட்காரச் சொல்லி சொல்லுங்கோ மாமா..என்ன விஷயம்" எனக் கேட்க
" நான் இந்த அக்ரஹார வாத்யார். பக்கத்து ஆத்தில் ஸ்ரார்த்தம். திடீரென ஒரு பிராமணாள் வர முடியாத சூழ்நிலை. ஸ்ரார்த்தம் தடை படக்
கூடாது. அதான் நீங்க பிராமணாள வர முடியுமானு கேட்க வந்தேன். நீங்க அக்ரஹாரத்துக்கு புதுசு. தப்பா இருந்தா ஷமிக்கணும்‌."
அவர் சற்று யோசித்து விட்டு சிரித்தவாறே நல்ல வேளை. இன்னிக்கு குருவாரம் கார்த்தால விரதம். ஒரு நிமிஷம் என்றவாறு உள்ளே
செல்கிறார். சற்று நேரத்தில் வெளியே வந்து ஒரு மணிக்கு முடிஞ்சுடுமா எனக் கேட்க, வாத்யார் மகிழ்ச்சியுடன்
பன்னண்டரைக்கு நீங்க கிளம்பிடலாம்
என்கிறார். " சரி கிளம்புங்கோ.. நான்
'மடி' கட்டிண்டு வரேன்" என்கிறார். வாத்யார் மகிழ்ச்சியுடன் சென்று விபரங்களைக் கூற எல்லோருக்கும் பரம சந்தோஷம்‌.
வாத்யார் பரபரவென காரியத்தை ஆரம்பிக்க அந்தப் புதியவர் உள்ளே வர
வாங்கோ.. வாங்கோ ரொம்ப சந்தோஷம். நல்ல நேரத்தில் உபகாரம் பண்ணினேள். என அவரை உபசாரம் பண்ண, பிறகு மளமளவென பிராமணாள் சாப்பிட்டு தக்ஷிணை பெற்று ஸ்ரார்த்தம் முடிவடைந்தது. மீண்டும் அவருக்கு நன்றி கூற அவர் சொல்கிறார்.
" பிராமணார்த்தம் சாப்பிடுவது பிராமணனின் கடமை. முடிந்தவரை மாட்டேன் என சொல்லக்கூடாது. இது ரொம்ப புண்ணியம். எல்லா பித்ருக்கள் ஆசிகளும் கிடைக்கும். இதை
மகா பெரியவா பலமுறை சொல்லி இருக்கா..ஆனா ரொம்ப பேர் இதுக்கு வரதில்லை. அது ரொம்ப பாவம். உங்க
ஆத்துக்கு மட்டும் வரணும்னு நினைக்கிறேள். ஆனா நீங்க மட்டும் போக மாட்டேன்னு சொன்னா அது நியாயமா? என்கிறார்.
பிறகு இங்கு பிராமண சமாஜம் இருக்கா எனக் கேட்க வாத்யார் இருக்கே நான்தான் செக்ரட்டரி" எனக் கூற, அந்தப் புதியவர் தனக்கு தரப் பட்ட தட்சணையுடன் கூட ஐநூறு ரூபாய் கொடுத்து "இதை என்
பங்காக வச்சுக்குங்கோ" என்றவாறு " போய்ட்டு வரேன்" என கைகூப்பி விடைபெறுகிறார்.
வாத்யார், " மாமா..ஒரு நிமிஷம்.. நீங்க யாரு..என்ன உத்யோகம் என சொல்லலையே" எனக் கேட்க, அவர் சிரித்தவாறே *நான் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்" என்கிறார்.*
Ithu oru forward.Just imaginary.
But we person a existent case.Please read.

ஒருவருடைய தந்தையாருக்கு ஓரிரு நாட்களில் ஸ்ராத்தம். ஏதோ ஒரு காரணத்தினால் ஸ்ராத்தம் பண்ணி
வைக்க வாத்யார் கிடைக்கவில்லை. என்ன பண்ணுவது என்று கவலையுடன் சென்று கொண்டிருந்தவர் கண்களில் ஆற்றங்கரையில் வெள்ளை வெளேரென்று தனது வேஷ்டியை துவைத்துக் கொண்டிருந்த ஒரு புரோகிதர் கண்ணில் படுகிறார்.

உடனே அவரிடம் ஓடோடி தனது தந்தையின் ஸ்ரார்த்த நாளைக் கூறி அவரால் அதை நடத்தித் தரமுடியுமா என்று கேட்கிறார். அந்த புரோகிதரும் "பேஷா நடத்தி தருகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன்" என்று கூறுகிறார்.

என்னவென்று இவர் வினவ அதற்கு அந்த புரோகிதர் "அன்று சரியாக 11 மணிக்கு நான் உங்கள் வீட்டை விட்டு கிளம்பவேண்டும் அதற்கு தகுந்தாற்போல் உங்களால் தயாராக இருக்கமுடியுமா" என்று கேட்க இவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.

ஸ்ரார்த்த நாளன்று நேரத்தில் வந்த அந்த புரோகிதர் ஸ்ரார்த்த காரியங்களை சிறப்பாக நடத்திக்கொடுத்து சரியாக 11 மணிக்கு அவர் வீட்டைவிட்டு கிளம்பவும் வீட்டின்முன் அந்த காலத்தில் பிரபுக்கள் பயணம் செய்யும் குதிரை பூட்டிய கோச் வண்டி வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது. அந்த வண்டியில் ஏறி புரோகிதர் சிட்டாக பறந்து விடுகிறார்.

க்ருஹஸ்தருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும். "யார் இவர்? மிகவும் முக்கியஸ்தவராக இருப்பார் போலிருக்கிறதே. அவரை
புரோகிதராக கூப்பிட்டு தவறிழைத்து விட்டோமோ?" என்று பயம் அதிகரிக்க அவரைப்பற்றி விஜாரித்ததில் தெரிந்து கொள்கிறார் புரோஹிதராக வந்தவர் பிரபல வக்கீல் திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்று.

இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இவர் அங்கம் வகித்தார். அந்த குழுவிற்கு திரு அம்பேத்கர் தலைவராக நியமனைம் செய்யப்பட்டார். இதைப்பற்றி திரு அம்பேத்கர் குறிப்பிடும்பொழுது "என்னைவிட பெரிய, சிறந்த, திரு அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரைப்போன்று ஆற்றல்மிக்கவர்கள் இருக்க என்னை தலைவராக நியமனம் செய்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது" என்று கூறியிருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு "திவான் பகதூர்" மற்றும் "சர்"பட்டம் கொடுத்து கௌரவித்தது இவருடைய சட்டப் புலமை, வாதத் திறமை அபரிமிதமானது. இதை கௌரவிக்கும் வகையில் இவரைத்தேடி நீதிபதி பதவி வந்தது. ஆனால் இவர் அதை ஏற்றுக்
கொள்ளவில்லை.

இவரது வாதத் திறமைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு.

வெள்ளையர் ஆட்சியில் வெள்ளைக்
காரர்களும் வெள்ளைக்காரர்களால் கௌரவிக்கப் பட்டவர்களும்தான் குதிரை பூட்டிய சொகுசு கோச் வண்டியில் பிரயாணம் செய்யலாம். மீறினால் சிறை தண்டனை.

இந்த சட்டத்தை மீறி ஒரு ஜமீன்தார் குதிரை வண்டியில் செல்ல அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு திரு அய்யரிடம் வந்தது. நீதிமன்றத்திற்கு சென்ற திரு அய்யர் தனது வாதத்தை தொடங்கினார்.

அவர் நீதிபதியைப் பார்த்து " கனம் நீதிபதி அவர்களே ஜமீன்தார் பயணம் செய்த அந்த வண்டியையும் அதை இழுத்துச்சென்ற மிருகத்தையும் தாங்கள் பார்க்கவேண்டும் என்று வேண்டுகிறேன்" எனறார்.

வண்டியும் குதிரையும் நீதிபதிமுன் ஆஜர்படுத்தப் பட்டது.அதை பார்த்த நீதிபதி "சரி பார்த்துவிட்டேன் இப்பொழுது உங்களது வாதம் என்ன?" என்று வினவினார்.

அடுத்த நிமிடம் திரு அய்யர் அவர்கள் நீதிபதியைப் பார்த்து " கனம் நீதிபதி அவர்களே சட்டத்தில் ஆண் குதிரையால் இழுக்கப்படும் வண்டி(horse driven vehicle) என்றுதான் இருக்கிறதே தவிர பெண் குதிரையால் இழுக்கப்படும் வண்டி (mare driven vehicle) என்று இல்லை. தயவு செய்து இந்த வ ண்டியை இழுத்த மிருகத்தை பார்த்தீர்களானால் தெரியும் அது பெண் குதிரை என்று. இதில் எந்த சட்ட மீறலும் இல்லை. ஆகவே ஜமீன்தாரை உடனே விடுதலை செய்ய வேண்டும்" என்றார்

மூச்சு பேச்சற்றுப்போன நீதிபதி ஜமீன்தாரை அடுத்த நிமிடமே விடுவித்தார்.

இந்த வழக்கிற்குப் பிறகுதான் சட்டத்தில் "ஆண்பால் என்பது பெண்பாலையும் குறிக்கும்" என்ற மாற்றம் புகுத்தப்பட்டது .
அந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கில் பீஸ் வாங்கும் பிரபல வக்கீலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் எளிமையான தோற்றத்துடன் புரோகிதராக வந்து ஸ்ரார்தத்தை சிறப்பாக நடத்திக்
கொடுத்த திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் பண்பை என்னவென்று சொல்வது?
Jayasala 42
( THIS HAS BEEN POSTED IN REGIONAL LANGUAGES FORUM ALSO)

Read Entire Article