-
முள்
இந்திரா ப்ரியதர்ஷிணி
முள் என்றால் குத்துவது குடைவது என்றெல்லாம் சொல்வதைக் காட்டிலும், நம்மை இருக்கவிடாமல் செய்வதே முள். எது சதா நம்மை பீடிக்கிறதோ அது முள்.
இந்த வரையறை தோன்றியது ஒரு பெரிய விருக்ஷத்தின் அடியில். அந்த மரத்தின் அடியில் ஒரு மேடை இருந்தது. அதில் யாரும் அமரக் கூடாது என்று முள் ஆணிகளை அடித்து வைத்திருந்தனர். அந்தக் காலத்தில் வழிப்போக்கர் கிடக்க திண்ணை இருந்த வீடுகள் போய் யாரும் அயர்வு தீர அமர்வதைத் தடை செய்வார்களா என்று தோன்றியது. மனதை மிகவும் பாதித்தது. கலியுகம்.
மோகமுள் என்ற சிறந்த கதை தமிழில் தி.ஜா.ராவுடையது. இதில் மோகம் எனும் முள் உறுத்த அதைக் களைந்த பின் இவ்வளவுதான் என்று சொல்லும் கதைப் போக்கு.
தைக்கும் முட்களில் சொல்லால் ஆன முள் மிகவும் ஆழமானது. வடு ஏற்படுத்தக் கூடியது. முள் என்ற சொல்லிற்கு செடி மரத்தின் கூரிய குச்சி போன்ற பகுதி என்று விளக்கம். முட்களில் பல வகை உண்டு. தராசு முள், கடிகார முள் எல்லாம் இதை ஒட்டியதே. பலா முள், முள்ளம் பன்றி முள், அன்னாசி முள், ரோசா முள் என இனிப்பும் குத்தும் சேர்ந்தே வாழ்வில் இருக்கின்றன. புறாவின் ஆண் குறி முள்தான். அகராதி விளக்கம். நெருஞ்சி முள் ஒரு மாதிரி பச்சையாய் பூவாய்த் தோன்றும் முள். மிகவும் கவர்ச்சியான பலவும் இப்படித்தான்.
முள் ஒரு இயல்பான சௌகரியம் இன்மையைக் குறிக்கும். அரச பதவி முள் கிரீடம். இதன் நேரெதிர் சிறகு. லகுவான சுதந்திரம் காட்டும் குறியீடு. கவலை கூட முள்தான். குற்றம் முள்தான். துன்ப நினைவு கூட. நெருடும் எதுவும் முள்தான். "நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்" திருமந்திரம். முள்ளை எடுத்துக் களைந்தாலும் அற்ப சொற்ப நேரம் அதன் நினைவூட்டல் இருக்கும்.
JAYASALA 42 -
Thyagarajan Finest Post Winner
This reminded maine of different முள் recently. Here is that story:
விவசாயி
ஒருவருக்கு
மலை அருகே தோட்டமிருந்தது. அதில்
துளசி பயிர் செய்து
இருந்தார்.
துளசி
செடிகளுக்கு இடையே
முளைக்கும்
களைகள்,
முட்செடிகள்
ஆகியவற்றை பிடுங்கி
எடுத்து துளசி செடிகைளை
கண்ணும்
கருத்துமாக
பாதுகாத்து
வளர்த்து
வந்தார்.
ஒரு நாள்
துளசி செடிக்குஇடைேய வளர்ந்து இருந்த
ஒரு முட்செடி செடி ஒன்றை
பிடுங்கி
எறிந்தார்.
உடனே அந்த முட்செடி
கண்ணீர்
விட்டு
அழுதது.
விவசாயி
அந்த முட்செடியிடம் சென்ற போது அது சொன்னது
'' நான் தான் யாருக்குமே
பயன்படபோவதில்லையே எந்த
திறமையும்
இல்லாத
என்னை ஏன்
கடவுள்
படைத்தார்.''
என வருத்தப்பட்டது.
''கடவுள்
யாரையும்
காரணம்
இல்லாமல்
படைப்பதில்லை.
எலோருக்கும்
திறமையும்,
பலத்தையும் கொடுத்து
இருக்கிறார். அதை நாம்
தான்
கண்டுபிடித்துபயன் படுத்த வேண்டும்''
என்று
விவசாயி
சொல்ல..''என்ன திறமைஇருக்க
போகிறது
எங்கிட்ட,
நானோ
முட்செடி
பிறரை
காயபடுத்துவேனோ
தவிர,
வேறு
யாருக்கும்
உதவியாக
இருக்க
மாட்டேன்''
என்று தன்னை இழிவாக பேசியது.
மறுநாள்
விவசாயி
தன்
தோட்டைத்திலிருந்தது
பிடுங்கி
எறிந்த
முட்செடிகளை
எல்லாம்
ஒன்று
சேர்த்து
தோட்டத்தை
சுற்றி வேலி அமைத்தார்.
பின்பு
அந்த
முட்செடியிடம் சென்று,
''நீ முட்செடி தான் பிறறை
காயப்படுத்துபவன் தான்.
ஆனால் உன்னிடமும் திறமை இருக்கிறது பலமும்
இருக்கிறது.
அதனால் தான் இன்று இந்த தோட்டைத்தையே பாதுகாக்கும்
காவல்கார
வேலியாக
உயர்ந்துவிட்டாய்''
என்று
விவசாயி
சொல்ல..
கடவுள்
படைத்த
எல்லா
உயிர்களுக்குமே திறமையும்
பலமும்
உண்டு
என்பதை
உணர்ந்தது
முட்செடி.