முதுமை இனிது!

1 month ago 25

முதுமை இனிது!


விசேஷங்களுக்குச் செல்லும்போது
Hair Dye அடிக்காமல் வெள்ளை முடியோடு
இருந்தால், போகும் இடங்களில்
கிடைக்கும் மரியாதையே தனி தான்.

யோசித்துப் பார்த்தால், நமக்கு வயசாயிடுச்சு என்று பொதுவாக ஞாபகப்படுத்துபவை:

~ விஷேசம் நடக்கும் வீட்டில் நுழைந்தால், கூட்டமாக இருந்தாலும், நமக்கு யாராவதுதான் அமர்ந்திருக்கும் இருக்கையை கொடுக்கும்போது.

~ சிறு வயது குழந்தைகள் தாத்தா,
grandpa என்று அழைக்கும் போது.

~ எதுக்கு மாமா முடிவெள்ளை வெளேரென்று. Dye அடிக்கலாம் இல்லே என்று உரிமையோடு நடுத்தர வயதில் இருக்கும் உறவுப் பெண்கள் பேசும் போது.

~ பந்தி போட்டவுடன் பெரியவங்க எல்லாம் முதல்லே சாப்பிடப் போகலாம் என்று நம்மை பார்வை பார்க்கும் போது.

~ பந்தியில் இரண்டாவது serving நம்மை பார்த்தால் வராது. இவன் எங்கே அதிகம் சாப்பிட போகிறான் என்று கேட்காமல் போகும் போது.

~ காபி ஸ்டாலில், சர்க்கரை போடலாமா என்று கேட்கும் போது.

~ சம்பிரதாயம் ஏதாவது மறந்து விட்டால், பெரியவங்க நீங்க சொல்லுங்க என்று நம்மை நோக்கி கேட்கும் போது.

~ மணமேடைக்கு ஆசிர்வதிக்க சென்றால், பெண்ணும், மாப்பிள்ளையும் சட்டென்று நம் காலை தொட்டு வணங்கச் சொல்லும்போது.

~ நம் வயதை ஒத்த நண்பர்களுடன் பேசும் போது, சடகோபன் போய் சேந்துட்டான், அடுத்தது யார் தெரியலே என்று அசிரீரி கேட்கும் போது.

~ நகை, ஜவுளி கடையில், நம் Choice எடுபடாத போது.

~ இறைவனடி சேர்ந்தார் என்ற பேப்பர் விளம்பரத்தை பார்த்தவுடன், பிறப்பு இறப்பு தேதி பார்த்து, நம் வயதோடு comparison செய்து பார்க்கும் போது.

~ என்ன பெரிசு, வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா என்று ஆட்டோ டிரைவர் கேட்கும் போது.

~ கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டவுடன்,
digene மாத்திரை தேடும் போது.

~ Walking போகும் தூரம்
மெல்ல மெல்ல குறையும் போது.
மாடிப்படி ஏறியவுடன்,
மூச்சு வாங்கும் போது.

~ Pizza வீட்டில் ஆர்டர் பண்ணினால், நம்மை வேற்றுலகவாசி போல நடத்தும்போது.

~ கொஞ்சம் இருமினாலும், கண்டது எல்லாம் சாப்பிட கூடாது என்று டன் டன்னாக proposal செய்யும்போது.

~ TV கொஞ்ச நேரம் அதிகம் பார்த்தால், போய் தூங்குங்க, போதும், ஒத்துக்காது என்று கீதை உபதேசம் செய்யும்போது.

~ நம்ம உடம்பை நம்ம தான் பாத்துக்கணும். மத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்று General wellness tips கேட்கும் போது.

~ கண்ணாடியில் நம் திருமுகத்தை கூர்ந்து கவனிக்கும்போது.

~ சொல்லிக் கொண்டே போகலாம்.

இனிது இனிது; முதுமை இனிது..

(வாட்ஸ்ஆஃப் பகிர்வு)

Read Entire Article