தொட்டதெற்கெல்லாம் பரிகாரம் என்று ஓடுபவர்கள் சற்று நிதானமாக இருக்க வேண்டும். செவ்வாய், சனி, ராகு & கேது போன்ற கிரஹங்களின் பீடிப்பு இருந்தால் குறிப்பிட்ட காலம் வரை சில தீமைகள் ஏற்படத்தான் செய்யும்.
கிரஹங்களால் பாதிப்பு ஏற்படும் பொழுது குல தெய்வம், எல்லை தெய்வங்களுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்யும் பொழுது கிரஹங்களின் வீரியத்திலிருந்து நம்மை பாதுகாக்கும். ஆனால் பாதிப்பு குறிப்பிட்ட காலம் வரையிருக்கும்.
கிரஹ தோஷங்களால் பீடிக்கப்படும் பொழுது தெய்வ உபாசனையில் மட்டும் ஈடுபட்டால் கிரஹ தோஷங்கள் சற்று முன்பே கூட விலக வாய்ப்புள்ளது. நன்னடத்தை காரணமாக குற்றவாளி சீக்கிரம் விடுதலையாவது போன்றதாகும்.
மூக்கு உள்ளவரை ஜலதோஷம் விடாது, கடல் உள்ளவரை அலை ஓயாது, நரர்கள் (மனித குலம்) உள்ளவரை நவக்கிரஹங்கள் நம்மை விடாது. ஆகவே தொட்டதெற்கெல்லாம் பரிகாரம் என்று அலைய வேண்டாம். பகவானை வேண்டிக் கொண்டு பலகாரங்களை உண்டாலே பயம் தெளிந்து விடும்.

JAYASALA 42