என்னைப் பொறுத்தவரையில் பிடிவாதமாக ட்யூரிங் மெஷினைப் பற்றி சொல்லத்தான் போகிறேன்!
அலன் மத்திஸன் ட்யூரிங் 1954-ல் தன் 42-வது வயதில் இறந்துபோனபோது கம்ப்யூட்டர் இயலில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி. அவர் ஒரு மிக எளிய இயந்திர அமைப்பைப் பற்றிச் சொன்னார். ஒரு சதுர அட்டை. அதன் மத்தியில் ஒரு சதுர ஜன்னல். அதனடியில் சதுர சதுரமாக பிரிக்கப்பட்ட ஒரு நீண்ட பேப்பர் நாடா! அவ்வளவுதான். இந்த 'மெஷினை'யும் ஒரு சில எளிய விதிகளையும் வைத்துக்கொண்டு, உலகத்தில் உள்ள எந்த மஹா மஹா கணக்கையும் போட முடியும் என்று நிரூபித்தார். என்ன, கொஞ்சம் நேரமாகும். இருந்தும் ஆதார சித்தாந்தங்கள் முக்கியம்.
ட்யூரிங் 'சிந்திக்கும் இயந்திரங்களை' (Intelligent machines)ப் பற்றி சற்று அதிகமாகவே சிந்தித்தார். அடுத்த அறையில் இருப்பது மெஷினா மனிதனா என்று கண்டுபிடிக்க முடியாதபடி, ஒரு மெஷினால் பதில் சொல்ல முடிந்தால் அதை 'சிந்திக்கும் இயந்திரம்' என்று சொல்லலாம் என்றார்.
கி.பி. 2000த்துக்குள் கம்ப்யூட்டர்கள் ஒரு சாதாரண மனிதனை ஐந்து நிமிஷத்துக்காவது இவ்வகையில் ஏமாற்றிவிடக்கூடும் என்று ட்யூரிங் அப்போதே எழுதினார்.
இன்றைய தினங்களில் 'செயற்கை அறிவு' என்கிற இயல் கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் ஒரு முக்கியமான பகுதி. ஸ்டான்ஃபோர்டு, கார்னிஜி மெலன் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தலை கலைந்து, தூக்கம் குலைந்து, இதில் ரிஸர்ச் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வாக்கியங்களை, ஒலிக் குறிப்புகளையெல்லாம் மெஷின்படுத்திவிட்டார்கள். வாக்கியங்களின் அர்த்தங்களை எப்படி ஒரு இயந்திரத்துக்கு புரியவைப்பது என்றுதான் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளின் இலக்கணங்களை புதிய கம்ப்யூட்டர் நோக்கில் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். டிசம்பரில் பெங்களூரில் கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளும் சம்ஸ்க்ருதபண்டிதர்களும் ஒரு சர்வதேச மகாநாடுகூட்டப் போகிறார்கள்.
மனித சிந்தனையின் ஆதார சுருதியைப் பிடிப்பதுதான் அத்தனை கஷ்டம்.
-சுஜாதா