கொஞ்சம் சிரிங்க பாஸ்...

1 month ago 28
கொஞ்சம் சிரிங்க பாஸ்...
1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா
நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா
நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா
நண்பர் 2: ?????
__________________________
2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.
காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?
காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் ...
காதலி : ????
__________________________
3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத
மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி
அப்பா : ?????
4) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.
கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
மேனேஜர் : ?????
__________________________
5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..?
மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட்
பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல,
மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ...
பிரின்சிபல் : ?????
__________________________
6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.
பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்
கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வாரம்?
பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது
கடவுள் : ?????
__________________________
7) அமைச்சர் : மன்னா எதிரி நாட்டு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.
மன்னர் : போருக்குலாம் வரமுடியாது, வேண்டுமானால் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்
அமைச்சர் :?????
__________________________
8) காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
காதலி : (பேச வில்லை)
காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.
காதலி : (பேச வில்லை)
காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?
காதலி : பேசாம இரு கவுன்ட்(கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.
காதலன் : ?????
___________________________
9) கணவன் : என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது
மனைவி : உங்களுடைய உண்மையான லவ்
கணவன் : நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி
மனைவி : ????
___________________________
10 ) டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு ப்ப் இருக்கா?
நர்ஸ் : இல்ல
டாக்டர் : பல்ஸ் இருக்கா?
நர்ஸ் : இல்ல
டாக்டர் : சுகர் இருக்கா?
நர்ஸ் : உயிரே இல்ல அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?
டாக்டர் : ???

JAYASALA 42

Read Entire Article