கார்ப்பரேட் ஆஸ்பத்ரிகள்

1 month ago 27
  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages: 5,458 Likes Received: 10,683 Trophy Points: 438
    Gender: Female
    • கார்ப்பரேட் ஆஸ்பத்ரிகள்
      ( அல்லது முகமூடி அணியாத பகல் கொள்ளையர்கள்) ::
      இது ஒரு முகநூல் பகிர்வு::

      விழிப்புணர்வு.-- ஆஸ்பத்திரி
      இன்று பல ஆஸ்பத்திரிகளில் நடப்பது
      நாமெல்லாம் சாதாரண சிகிச்சைக்காகவோ தீவிர சிகிச்சைக்காகவோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறோம். அனுமதித்த பத்து நிமிடத்திற்குள் ஒரு நர்ஸோ ஒரு நபரோ ஒரு டப்பா முழுவதும் மருந்து மாத்திரைகளையும் இன்ஜெக்ஷனையும் கொண்டு வந்து அங்குள்ள டிராயரில் வைத்து விடுவார்கள். என்ன மருந்து கொண்டு வந்தார், எத்தனை இன்ஜெக்ஷன் கொண்டு வந்தார்? எத்தனை பாட்டில் சலைன் கொண்டு வந்தார் என்பதை தெரிவிக்க மாட்டார்கள். அதற்கு உண்டான பில்லையும் நம்மிடம் கொடுக்க மாட்டார்கள். அதற்குண்டான விலையும் நமக்குத் தெரியாது.
      அனேகமாக இந்த மருந்துகளை மொத்தமாக மருந்து தயாரிக்கும் கம்பெனியிலிருந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். இந்த மருந்துகள் வெளியில் மருந்து கடையில் விற்கும் விலையை விட இரு மடங்கு அதிகம் இருக்கும்.
      இரண்டு ஒரு நிமிடத்தில் ஒரு ஆள் ஆஸ்பத்திரி உடையுடன் வந்து அவதரித்து நம்மளை எல்லா உடைகளிலும் கழட்டச் சொல்லிவிட்டு அதை போட்டுக்க சொல்லுவார்.
      அந்த உடை ஏப்ரன் மாதிரியும் இருக்காது. நைட்டி மாதிரியும் இருக்காது. லுங்கி மாதிரியும் இருக்காது. பைஜாமா மாதிரியும் இருக்காது. அதுக்கு பட்டனே இருக்காது. இரண்டு மூன்று இடங்களில் நாடா தொங்கி கொண்டிருக்கும். அதை வைத்து கட்டிக்க சொல்லுவார். ரூமில் அந்த நபரை தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்.யாரை கட்டிக் கொள்வது என்று சந்தேகம் வரும்.
      ஐந்து நிமிடத்தில் ஒரு செவிலியர் வந்து கையின் பின்புறத்தில் ஊசி குத்தி குத்தி குத்தி ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்து பக்கத்தில் ஒரு ஸ்டாண்டை வைத்து ஒரு பாட்டிலை அதில் தலைகீழாக கவுத்து தொங்க விடுவார்.
      பின்னாடி இன்னொரு செவிலியர் வந்து விரலில் குத்தி ரத்தத்தை எடுத்து எல்லா டெஸ்டையும் செய்து கொள்வார்கள். வேண்டுமோ, வேண்டாமோ நாம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதற்கு முந்திய நாள் எல்லா டெஸ்ட் களையும் பண்ணி இருந்தாலும் அதை அவர்கள் பார்க்க மாட்டார்கள் .அவர்கள் லேப்பில் எல்லாவற்றையும் திரும்ப செய்ய சொல்வார்கள். அதற்கு உண்டான விலையே தனி. முட்டியில் வலி என்று ஆஸ்பத்திரியில் சொன்னால் கூட அவர்கள் உடனே அட்மிட் பண்ண சொல்லுவார்கள். Liver relation test, Kidney relation test,இசிஜி, யு எஸ் ஜி, ஜி எஸ் டி எல்லாத்தையும் போட்டு நம்ம கிட்ட இருந்து எவ்வளவு புடுங்க முடியுமோ புடுங்கி விடுவார்கள்.
      இன்ஷூரன்ஸ் கவர் இருக்குமென்றால் அதற்கென்று தனி ரேட். இன்சூரன்ஸ் இல்லை என்றால் வேற ரேட்.
      அட்மிட் பண்ணும் போது எவ்வளவு அவசரமா ரெண்டு நிமிஷத்துக்கு ஒருத்தர் வந்து குத்தி குத்தி எடுத்தாங்களே? அந்த ஸ்பீட் டிஸ்சார்ஜ் பண்ணும் போது இருக்கவே இருக்காது. நீங்கள் குறைந்த பட்சம் 10 தடவையாவது அட்மினுக்கும் பில்லிங் டிபார்ட்மெண்டுக்கும் டிஸ்சார்ஜ் சம்மரி வாங்குவதற்கும் அலைய வேண்டியிருக்கும். என்னடா இது? இவ்வளவு லேட் ஆகுது? இன்னும் அரை மணி ஆச்சுன்னா ஒரு நாள் சார்ஜ் கூட வாங்கி விடுவார்களோ என்று வயித்துல புளியை கரைக்கும்.
      கிளம்புவதற்கு முன் ஒரு செவிலியரோ ஒரு ஆளோ வந்து மிச்சம் மீதி இருக்கிற மருந்து மாத்திரைகளையும் இன்ஜெக்ஷனையும் மீதம் இருக்கிற செலைன் பாட்டில்களையும் எடுத்துக்கொண்டு போவார்கள். ஒன்றை மறந்து விடாதீர்கள்!!!!! திரும்ப எடுத்துக் கொண்டு போகும்போது அதன் விலையை பில்லில் குறைக்க வேண்டும். ஆனால் நீங்கள் செக் பண்ண வில்லை என்றால் அதற்கும் சேர்த்து நீங்கள் பணம் தர வேண்டி இருக்கும்.
      எனது தனிப்பட்ட அனுபவத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் இதை எழுதுகிறேன். நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி சர்ஜரி முடிந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது நான் குறித்து வைத்திருந்த மருந்துகளை, திருப்பி எடுத்துக் கொண்டு போன செவிலியரின் கையெழுத்தை வாங்கி வைத்துக் கொண்டேன். டிஸ்சார்ஜ் பில்லில் திருப்பி எடுத்துக் கொண்டு போன மருந்துகளின் விலையும் சேர்க்கப்பட்டிருந்தது.
      நான் குரலை உயர்த்தி சத்தம் போட்ட போது அப்படி நடக்கவே இல்லை என்று சாதித்தனர். அப்போது செவிலியரின் கையெழுத்து வாங்கி வைத்திருந்த பேப்பரை காண்பித்தவுடன் திரு திரு என்று விழித்தனர். பில்லில் 12 570 ரூபாய் அதிகமாக ஏற்றப்பட்டிருந்தது.
      மத்யமர் நண்பர்களே! தயவு செய்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போகும்போது ஒரு முறைக்கு இரண்டு முறை பில்லை சரி பாருங்கள். திருப்பி எடுத்துக் கொண்டு போன மருந்து விலையை குறைக்க நிர்பந்தியுங்கள்.
      வயிற்றுப்போக்கு வாந்தி என்று அட்மிட் ஆனா கூட பிசியோதெரபிஸ்ட் வந்து ஒரு விசிட் பண்ணுவார். அதற்கு ஆயிரம் ரூபாய் உங்களிடம் வாங்கி விடுவார்கள். Doctors sojourn ல் கவனம் தேவை. யாரோ ஒரு டாக்டர் வந்து நாடியை பார்த்து, "குட் மார்னிங், நல்லா தூங்குனீங்களா, பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டீங்களா"ன்னு கேட்டுட்டு ஒரு ஆயிரம் ரூபாய் பிடுங்கி விடுவார்.
      அந்த டாக்டர் போகும்போது" மதியம் ஒரு டயட்டீஷன் வருவார். உங்களுடைய டயட்டிங் பேட்டர்ன் எல்லாம் மாற்ற வேண்டி இருக்கு. அவர் சொல்வதை கேட்டு செய்யுங்கள்" என்பார். அதுக்கு ஒரு ஆயிரம் ரூபா வெட்டணும்.
      இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பணத்தை எடுத்து கொடுத்தால் வீட்டுக்கு போவதற்கு 100 ரூபாய் ஆட்டோ சார்ஜ் டாக்டரிடம் கடனாக வாங்க வேண்டி இருக்கும்.
      எங்கெல்லாம் ஆஸ்பத்திரியை கார்ப்பரேட் எடுத்து நடத்துகிறதோ அங்கெல்லாம் இந்த கொள்ளை கண்கூடாக நடக்கும்.
      உங்கள் கண் எதிரிலேயே பணத்தை கொள்ளை அடிப்பதை தடுங்கள்.
      கவனம் தேவை.
      படித்தமைக்கு நன்றி.
      இதில் நாம் ஏமாறுவதை தவிர செய்யக்கூடியது ஏதுமில்லை...


    • இததனைககும. மிஞசி உயிரோடு திருமபுகிறோமே எனற மகிழசசி இது யாவரும அறிநத பரம ரகசியம நமது எநத சாமரததியமும இஙகே பலிககாது " தடுககில நுழைபவரைக கோலததில நுழைபவர " ஏமாறறும கதை தான
      Wed, 11 Sept astatine 3:52 pm


    • I afloat endorse the explicit narrations successful the guardant While determination is simply a request for firm hospitals successful the lack of prime attraction astatine government-run hospitals, the looting successful each corners successful the erstwhile is simply a cosmopolitan truth. It is not “Emaruvathu”. It is “Ematruvathu” – exploiting our weakness to which we succumb ourselves.
      About medicines - who prescribes them; quantity required; its usage and the unused quantity, each are shrouded successful mystery. This is 1 country wherever neither the diligent nor the attendant has scope to monitor; everything is done “under the table”. The archetypal happening erstwhile the nursing unit comes to cognize that the diligent is apt to beryllium discharged astatine immoderate time, they volition urgently commencement removing each the leftover medicines, not lone medicines but each different items specified arsenic gloves, napkins, disposable syringes, toiletries, and besides items similar thermometer etc purchased astatine the outgo of patient. I person noticed this precocious successful my ain case. When I told them that each those returnable items to the pharmacy should beryllium accounted for and reduced from the bill, they cleverly accounted for a fewer and near retired many. In our anxiousness to implicit each different formalities successful the aboriginal discharge of patients specified arsenic settling the bills, security assertion etc., we suffer show of these matters.

      The firm hospitals present travel the conception of bundle for immoderate large ailments requiring surgery. In the sanction of the specializer who performs the surgery, the infirmary quotes a fabulous sum by mode of bundle and that has got the support of Insurance Company. This bundle is different non-transparent country and the details thereof are kept undisclosed to the patients either successful beforehand oregon astatine the clip of colony of bills. When I asked them to springiness maine the interruption up, I was told that they are not expected to divulge. Without knowing the details of items covered by the package, we whitethorn not beryllium successful a presumption to find retired whether immoderate items included therein person besides been charged separately by the infirmary i.e. duplication. If 1 gets admitted to an exigency ward for immoderate superior and abrupt illness, the charges are treble the mean rate.

      Moreover, the hospitals cod 5 to 10 percent of the estimated measure arsenic beforehand deposit earlier admitting the patient. This is yet different grey country devoid of immoderate transparency. While seeking the support of the security company, the infirmary does not divulge to the security institution the magnitude collected from the diligent successful advance. The security institution is precise overmuch alert of this signifier but safely notation that this magnitude is to screen the non-medical items which are not covered nether the Policy. What are those non-medical items – GOK!

      Despite each these, if we get backmost location cured of our illness, we should see ourselves arsenic fortunate!

      JAYASALA 42

Read Entire Article