உலக்கை இந்தாரும் '

1 week ago 2
அதிதி ஸத்கார் ( விருந்தோம்பல்) பிரபலமாயிருந்த நாட்களிலும் தமிழ் நாட்டில் சில நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன.
ஒரு வீட்டில் தினமும் ஒரு அந்தணர்க்கு சாப்பாடு போட்டு விட்டு தான் உணவு அருந்துவது வழக்கம் .இது கணவனின் கட்டளை. மனைவிக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை.தினமும் ஒரு விருந்தாளியா?ஒரு நாளா வது தன இஷ்டப்படி சமைத்து சாப்பிட முடியவில்லையே. அவளுக்கு ஏக வருத்தம்.
ஒரு நாள் . சமையல் முடிந்தது. பரிச்சயமில்லா அந்தணர் ஒருவரை அழைத்து வந்தான் கணவன்.
அவரை உபசரித்து உள்ளே அமரச் செய்தான்.
மனைவியிடம்."நீ தயாராக எடுத்து வை. நான் நதியில் நீராடி விட்டு சீக்கிரம் வந்து விடுகிறேன் " என்றான்.
மனைவி ஒரு இலை போட்டாள் . இலையின் அருகில்
ஒரு உலக்கையை எடுத்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் பூசினாள் .அந்தணர் அந்த உலக்கை எதற்கு?" என்கிறார்.
உடனே மனைவி சற்றும் தயங்காமல் " வீட்டு சம்பிரதாய படி'சாப்பாடு போட்டு முடிந்ததும் அதிதியை உலக்கையால் அடிப்பது வழக்கம் என்றாள் .பாவம் அந்தணர், ஓட ஆரம்பித்தார். கணவன் உள்ளே நுழைந்தான்.'ஏன் விருந்தினர் ஓடுகிறார்?' என்றான்.

அதை ஏன் கேட்கிறேள் ? அவர் உலக்கை வேணும்னு கேட்டார். எங்களிடம் இருப்பதே ஒரு உலக்கை தான்.அதை எப்படி தர முடியும்?என்றேன். மனுஷன் கோவிச்சுண்டு போயிட்டார் " என்றாள் .
உடனே கணவன் " இந்த உலக்கை தானே,போனால் போகிறது.நம் ஆத்துக்கு இன்னொண்ணு வாங்கிக்கலாம் என்று சொல்லிக்கோண்டே அந்தணரை 'உலக்கை
இந்தாரும் 'என்று அவரைத் துரத்திக்கொண்டே போனார். அந்தணர் பயந்துபோய் இன்னும் வேகமாக ஓடினார். சாப்பாட்டுக்குப் பின்பு தானே அடி விழும்?' என்று மனைவி சொன்னாளே .இந்த மனுஷன் சாப்பாட்டுக்கு முன்னாலேயே அடிக்க வருகிறான் " என்று படு வேகமாக ஓட்டம் பிடித்தாராம்.

என் அம்மா இந்த வழக்கைப் பற்றிச் சொல்லும்போது நான் ஸ்ரீரங்கம் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் வைஷ்ணவத் தோழிகள் எல்லாம் ' தடியாராதனை என்று பேச்சு வழக்கில் என்று அடிக்கடி சொல்லும்போது எனக்கு இந்த நினைவுதான் வரும்..'
vaishnavite Friends kindly excuse. Now I cognize what thadyaaraadana means


JAYASALA 42
Read Entire Article