ஆதிசங்கரரின் கடைசி உபதேசம்!

3 months ago 36
ஆதிசங்கரரின் கடைசி உபதேசம்!
ஆதி சங்கரர் கடைசியாக செய்த உபதேசம்*ஸோபான பஞ்சகம்*என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள்.
பஞ்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம். ஸோபான பஞ்சகம் என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும்.
இதனை"உபதேச பஞ்சகம்" அல்லது"ஸாதனா பஞ்சகம்" எனவும் கூறுவர்.
இதில் சங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்.
1. தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது. அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய். பகவானை திருப்பி செய்ய பூஜைகள் செய். இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் “இது பகவானுக்கு” என அர்ப்பணம் செய்து விடு. வாழ்க்கை நெறி முறைகளை மீறி நடந்ததினால் குவிந்துள்ள உன் பாவ மூட்டையைச் சிறிது சிறிதாகக் கரைத்து விட்டு விடு, இதனால் சித்த சுத்தி ஏற்படும். இந்நிலையில் சம்சார தோஷங்களை துருவி அலசிப்பார்ப்பாயாகில் ஞான மார்க்கத்தில் அது கொண்டு விடும். இப்போது உனக்கு நித்யா நித்ய வஸ்துக்களின் அறிவு ஏற்படும். அநித்ய வஸ்துக்களில் வைராக்கியம் ஏற்படும் போது இடையில் தடை ஏற்படுமாகின். வீட்டை விட்டு (அடுத்த ஆசிரமத்தில் நுழைந்து விடு) வெளிச் சென்று விடு.
2. நீ ஸத்ஸங்கத்திலேயே நிலைத்திரு. பகவத் பக்தியை திடமாக்கிக் கொள். சமாதி சட்க ஸம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய். பின்னர் கர்மாக்கள் பிறவிச்சுழலில் தள்ளிவிடும் என உணர்ந்து கர்மாக்களை விட்டு விடு. பிறகு ஆத்ம ஞானி ஒருவரை அடைந்து, குற்றேவல் புரிந்து கேட்பாயாகில், அவர் கருணை கூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிப்பார். (ப.கீ.4-34). உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.
3. மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய். ச்ருதியை பிரமாணமாகக் கொள். வேதங்கட்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு. வேதங்களின் உட்கொருளை உணர தர்க்கம் என்ற புத்திக் கூர்மையை ஆயிதமாகக் கொண்டு அக்ஞானம் என்ற அசுரனை வெட்டிவிடு. நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்து கொள். இவ்வறிவு பெற்ற பின் அகந்தையை அணுகவிடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.
4. பசி என்ற நோயைத் தீர்க்க மரந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள் நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்து பிச்சை எடு. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதிக் செயல்படு. பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே. பதவியில் உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியததைச் சாதித்துக் கொள்ள விரும்பாதே.
5. ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பர பிரம்ஸ்ரீத்தைப் பற்றியே சிந்தித்திரு. பிரஹமும் பூர்ணம், இந்த ஜகத்தும் பூரணம், பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஜகத் வந்த பின் எஞ்சியிருப்பதும் பூர்ணம் என அறிந்து பூர்ணாத்மாவினை தரிசனம் செய். நீ செய்த கர்மாக்களின் பலனை ஞானத்தால் எரித்து விடு. பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மாக்களின் பலனைப் புரதத்தே தீர்த்துவிடு. பிரஹ்மத்திலேயே நிலைத்திருப்பதில் தயக்கம் காட்டாதே.
என் அருமை சிஷ்யர்களே உங்களுக்கு இதுவே என் இறுதியான உபதேசம்.
இவ்வாறு உபதேச மொழிகள் வழங்கிய பின் ஆதிசங்கரர் காமாட்சி அம்மன் சந்நிதியில் பரிபூரணம் அடைந்தார்.


JAYASALA 42
Read Entire Article