அந்த காலம் !

5 hours ago 1
  1. Cheeniya

    Cheeniya Super Moderator Staff Member IL Hall of Fame

    Messages: 12,756 Likes Received: 17,288 Trophy Points: 538
    Gender: Male
    ஊசி போடாத #Doctor.
    சில்லறை கேட்காத #Conductor ..
    சிரிக்கும் #police...
    முறைக்கும் #காதலி ..
    உப்பு தொட்ட #மாங்கா ..
    மொட்டமாடி #தூக்கம் ..
    Notebookன் #கடைசிப்பக்கம் ...
    தூங்க #தோள் கொடுத்த சக பயணி ....
    பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய #நண்பன்..
    இப்பவும் டேய் என அழைக்கும் #தோழி ..
    இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் #அம்மா...
    கோபம் மறந்த #அப்பா ..
    சட்டையை ஆட்டய போடும் #தம்பி..
    அக்கறை காட்டும் #அண்ணன்..
    அதட்டும் #அக்கா ...
    மாட்டி விடாத #தங்கை..
    சமையல் பழகும் #மனைவி ...
    சேலைக்கு fleets எடுத்துவிடும் #கணவன் ..
    வழிவிடும் #ஆட்டோ காரர்...
    #High beam போடாத லாரி ஓட்டுனர்..
    அரை மூடி #தேங்கா ..
    12மணி #குல்பி ..
    sunday #சாலை ...
    மரத்தடி #அரட்டை ...
    தூங்க விடாத #குறட்டை ...
    புது நோட் #வாசம்..
    மார்கழி #மாசம் ..
    ஜன்னல் #இருக்கை ..
    கோவில் #தெப்பகுளம் ..
    Exhibition #அப்பளம்..
    முறைப்பெண்ணின் #சீராட்டு ...
    எதிரியின் #பாராட்டு..
    தோசைக்கல் #சத்தம் ..
    எதிர்பாராத #முத்தம் ...
    பிஞ்சு #பாதம் ..
    எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,
    வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,
    சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,
    முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,
    *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,
    *எம்ஜிஆர், சிவாஜி* உயிரோடு இருந்தார்கள்.
    *ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.
    கபில் தேவின் *கிரிக்கெட்* .
    குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.
    *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
    எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,
    சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,*
    தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,
    மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,
    மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,
    ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,
    பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,
    எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,
    கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா #அழகி* ...
    பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத #ஆசிரியர் ...
    கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற #வார்த்தை ...
    7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் #பாட்டி..
    பாட்டியிடம் பம்மும் #தாத்தா ...
    எல்லா வீடுகளிலும், #ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது
    வீடுகளின் முன் #பெண்கள் காலையில் கோலமிட்டார்கள், மாலைப்பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்
    #சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்
    ஆடி 18 #தீபாவளி பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்
    பருவ பெண்கள் #பாவாடை தாவணி உடுத்தினர்.,
    சுவாசிக்க #காற்று இருந்தது., #குடிதண்ணீரை யாரும் விலைக்கு
    வாங்க வில்லை.,
    தெருவில் சிறுமிகள் #பல்லாங்குழி
    ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள்
    #நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
    இதை எழுதும் நான் ..
    படிக்கும் நீங்கள் ..
    இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
    கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

    அனுபவித்தவர்கள் யார்? யார்? மனசுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு வருமே!! உண்மையா? இல்லையா?
    Note:
    இது என்னுடைய படைப்பு அல்ல!

  2. Thanks for the nostalgia.
Read Entire Article