Thiru Arangan Thiru Ulaa

2 months ago 23
நாம்தான் வங்கி பணியில் அலுத்து சலித்துப் போய் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை L F C யில் ஊர் சுற்றப் போகிறோம். அரங்கனுக்கும் இதே நிலைமை தான் போலும்.அவரும் திருவரங்கத்தை விட்டு மூன்று முறை வெளியே சென்று திரும்பி இருக்கிறார்,அதுவும் ஆண்டுகள் கணக்கில் திருவரங்கம் விட்டு வெளியில் தங்கி இருக்கிறார்.

முதல் உலா
----------------------

அல்லாவுதீன் கில்ஜியின் தளபதி கொள்ளையடித்த கலைச் செல்வங்களில் அழகிய நம் பெருமாளும் ஒருவர்.அதை அன்பளிப்பாகப் பெற்றவர் அப்துல்லா ஹுசைன் பாதுஷா அவரது அழகிய இளம் பெண் சுரதாணி அரங்கனின் உருவத்தில் மனதைப் பறி கொடுத்தாள். டில்லி படைகள் அரங்கனைக் கடத்தியபோது பின் தொடர்ந்து சென்ற தேவ தாசிப் பெண் (இவளே பின் நாளில் பின் தொடர்ந்த வல்லி என்று பிரபலம் அடைந்தாள்)
ஆடல் பாடல்களினால் சுல்தானை வசியப் படுத்தி அரங்கனை மீட்டனர்.
மறுநாள் சுரதானி அரங்கனைக் காணாமல் தவித்து அரற்றவும் சுல்தான் ஒரு படையுடன் சுரதாணியை திருவரங்கம் அனுப்பினர்.இதை அறிந்ததும் திருவரங்கன் வேறு வழி மாறி திருப்பதி எடுத்துச் செல்லப்பட்டார் . திருவரங்கத்தில் அரங்கனைக் காணாத சுரதாணி அக்கணமே உயிரை மாய்த்துக் கொண்டாள் .அவளது உருவத்தை ஓவியமாய்த் தீட்டிக் கோவிலின் இரண்டாம் திருச் சுற்றில் வைத்து வழிபடத் தொடங்கினர்.பசும்பாலை காய்ச்சாமல் அருந்துவது வட புலத்தவர் வழக்கம்.எனவே காய்ச்சாத பசும்பாலும் ரொட்டி, வெண்ணையும் துலுக்க நாச்சியாருக்கு நிவேதனம்.பெருமாளுக்குக் கைலி அலங்காரத்துடன் திருமஞ்சனம் செய்வதும் சுரதாணியின் பொருட்டே.
அதுமட்டுமல்லாமல் வழக்கமாக வெற்றிலை போடுபவர்கள் சுண்ணாம்பைப் பின்பக்கம் தான் தடவுவார்கள்.டில்லி இஸ்லாமியர்கள் வெற்றிலையின் முன்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்களாம்.திருவரங்கத்தில் பெருமாளுக்குப் படைக்கும் தாம்பூலத்தில் இன்றும் வெற்றிலையின் முன்பக்கமே சுண்ணாம்பு தடவப் படுகிறது
ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கன் ஊர் திரும்பினார். அதற்குள் கோவிலில் வேறு பெருமாளைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கி விட்டனர். அந்தோ பரிதாபம்,ரங்கனை ஏற்றுக்கொ ள்ள யாரும் தயாராக இல்லை.சொந்த ஊரிலேயே அன்னியனாகி விட்டார்அழகிய ரங்கன்.நல்ல வேளை , துணி வெளுக்கும் பார்வை இழந்த வண்ணான் ஒருவர் ,ரங்கனின் ஈர வாடை தீர்த்தத்தை உட்கொண்டு ரங்கனை அடையாளம் கொண்டு'இவரே நம் பெருமாள்' என்று உரத்த குரலில் தெரிவிக்க , அன்று முதல் உற்சவர் 'நம் பெருமாள்' என்றே வழங்கப் படுகிறார்.

இரண்டாம் உலா
-----------------------------

நாத முனியின் சீடர் உய்யக்கொண்டார் காலத்தில் ஒரு கிளர்ச்சி ஏற்படவே,நம் பெருமாளுக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி பெருமாளை அழகர் கோவிலில் உள்ள கிணற்றில் மறைத்து வைத்தனர்.ஓர் ஆண்டுக்குப் பிறகு பெருமாள் மீண்டும் திருவரங்கம் திரும்பினார்.
மூன்றாம் உலா
---------------------------

இந்த உலா வேதாந்த தேசிகன் காலத்தில் ஏற்பட்டது.கொள்ளிடத்தில் பெருமாள் திருவிழா நடை பெறும்போது,இஸ்லாமியப் படை ஒன்று திருவரங்கம் நோக்கி வருவதாகத் தகவல் வந்தது,தேசிகர் நம் பெருமாளைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி விட்டு, கருவறையை சுவர் கொண்டு மறைத்தார்,இஸ்லாமியப் ப்டைத்தலைவர் நம் பெருமாளைக் காணாமல் பிற விக்ரஹங்களைத் தாக்கினர்.தேவதாசிப் பெண் ஒருத்தி படைத் தலைவனை மயக்கி கிழக்கு கோபுரத்தின் உச்சிக்கு இட்டுச் சென்று அவனைத் தள்ளி விட்டுத் தானும் கீழே விழுந்து உயிர்த் தியாகம் செய்தாள் 30 ஆண்டுகள் கோவிலில் வழிபாடு நின்று போனது...நம் பெருமாள் மதுரை, திருவனந்தபுரம்,திருப்பதி என்று ஊர் ஊராகச் சென்றார்.செஞ்சியை ஆண்ட கோபண்ணா உடையார் தேசிகனின் வேண்டுகோளுக்கு இணங்கி இஸ்லாமியரை வீழ்த்திப் பாழடைந்த கோவிலைச் செப்பனிட்டு ரங்கனை மீட்க வழி வகுத்தார்.தேசிகர் கருவறையில் எழுப்பிய சுவரை நீக்கி நம் பெருமாளை பெரிய பெருமாளுடன் இணைத்து வைத்தார்.
ஆனானப் பட்ட அரங்கனின் நிலைமையே இப்படி என்றால் சாதாரண மானுடர்கள் மழை, புயல் வெள்ளத்தால் இடம் பெயர்வது சாதாரணம்.

JAYASALA42
Read Entire Article