Saalaram

1 month ago 15

இந்த சொல் சம்ஸ்கிருத மூலம் உடையதாகும். எனினும் தமிழில் சரளமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். காற்றும் ஔியும் வேண்டி துளைகளுடன் வண்டி மற்றும் வீடுகளின் பக்கவாட்டு மதில்களில் இருக்கும் அமைப்பு.
பலகணி என்பது தமிழில் பல கண்களை உடையதாக யாரும் காண முடியாத ஆனால் ஔியும் காற்றும் தருவதாக நம்மால் காணும் வகையில் அமைக்கப்படுவது. திருவலஞ்சுழிப் பலகணி சிற்ப அற்புதம். உப்பரிகை என்பது உயரத்தில் இருந்து காணும் வகையில் இருப்பது. இதில் கேரளத்தில் சாருபடி என்று ஒரு அமரும் அமைப்பு உண்டு. இயல்பிலேயே முதுகிற்கும் அமருமிடத்திற்கும் நல்ல தோதான அமைப்பு.
நிற்க சாளரம் மீண்டும். இதன் தமிழ் காலதர் என்பதாம். காற்று செல்லும் வழி. அதர் = வழி. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் வள்ளுவம். செந்தமிழ் அறிஞர் கி.வா.ஜ அவர்கள் காட்டியதாம். நாம் பொதுவாக பயன்படுத்தும் ஜன்னல் என்ற சொல் போர்த்துகீசியமாம். இருக்கும். கோவாவில் வேறு எங்கும் காண முடியாத வகையில் வித விதமான ஜன்னல்களைப் பார்க்கிறேன். சன்னலும் ஸ்தூப அமைப்பும் மிக வித்தியாசமாக அழகாக இருக்கிறது. சன்னல் என்று சொன்னாலும் அது தமிழில் சேராது.
பல காலமும் பெண்கள் சன்னல் திரைச்சீலை மற்றும் பலகணிக்குப் பின்னால் அமரும் வழக்கம் இருந்ததால் எனக்கு சன்னலோடு சற்றே பிணக்குண்டு. இது முகலாயர் இராஜபுதனத்தார் தமிழர் என்றில்லை எங்கள் ஃபோர்ட் கொச்சி யூதர் தொழுகை இடமான சினகாகில் கூட உண்டு.
இலங்கை கொக்குவில் முத்துலிங்கம் அவர்கள் கதையில் யூதப் பண்பாடு குடும்பம் உணவு முறை நம்மைப் போன்றது என வாசித்து இருக்கிறேன். எங்கெல்லாம் முதியோர் பேணலும் குழந்தை வளர்ப்பும் அடுக்களைப் பணியும் இருக்கிறதோ அங்கு இந்த சன்னலும் முகத்திரையும் திரைச்சீலையும் நிச்சயம் இருக்கும். இராஜபுதன பிங்க் மஹாலில் ஏகப்பட்ட சாளரங்கள். கேரளத்தில் சன்னல் வழியாக மட்டுமே பார்க்கும் அநுமதியுடன் நம்பூதிரி இல்லக் குடும்பங்களில் அந்தர்ஜனம் என்ற முறை இருந்தது. இவை எல்லாமே பெண்ணடிமைத்தனத்தின் பல்வேறு குறியீடுகள்.
சன்னல் வடிவங்களில் போர்த்துக்கீசியம் ஆங்கிலேயம் ஃபிரெஞ்சு நம்முடைய பழைய பாரதம் என்று பலவும் உண்டு. கேரளத்தில் சன்னல் வழியாக கிணற்றில் நீர் இறைக்கும் வசதி உண்டு. மரக்கதவுகளை இரண்டாகத் திறக்கலாம். ஆண்டில் எட்டு மாதம் மழை பெய்தால் என்ன செய்ய? மிக அழகான சன்னல்கள் புகைவண்டிக்குத் தான் உண்டு. பறக்கும் விமான சன்னல்கள் மிக குறுகலானவை. பேருந்து சன்னல்கள் விரைவாக நகரும். அளவான வேகத்தில் அகலமான அளவில் அதிசயமான புகைவண்டி சன்னல்கள் அருமை. கொல்லம் செங்கோட்டை புகை வண்டித் தடத்தில் போனால் புரியும்.
சாளரங்களைத் திறந்து வைக்க வீட்டில் ஔி காற்று நிறையும். கனத்த திரைச் சீலைகள் அழகுக் கெடுப்பான். ஒரு காலத்தில் திரைப்படங்களில் சன்னல் காதல் பிரபலமாக இருந்தது. எதிர் வீட்டு சன்னல் கதைகள் ஏராளம். பொது வளாகங்களில் ஜன்னல்கள் பொருள் டிக்கட் சீட்டு விதரணம் செய்யும் கவுண்டர்கள் கூட.

இந்த சன்னல் ஆங்கிலப் பெயர் அதாவது விண்டோ என்ற பெயர் பலவாறு இப்போது பயன் படுத்தப் படுகிறது. சிங்கிள் வின்டோ க்ளியரன்ஸ்...ஒற்றைச் சாளர முறை அரசாங்கத்தில் அநுமதி வாங்க உதவுகிறது.
சன்னல் என்ற வாக்கின் புதுப் பொருள் பில் கேட்ஸ் அவர்களின் மென் பொருள் கொண்டு வந்தது. அது உலகை இணைக்கும் ஒற்றைச் சாளரமானது. இந்த மென்பொருள் வந்தபோது எங்கள் நடுவில் நண்பர் ஒருவர் முனைவர் அதாவது டாக்டர் சன்னல் என்ற பட்டத்துடன் உலவி வந்தார். அத்தனை பாண்டித்யம்! சன்னல் அத்தியாயம் முற்றும்.
-- இந்திரா ப்ரியதர்ஷிணி

In those days the connection "WIDOW' was considered to beryllium an inauspicious one.
SO whenever they were referring to a widow they said" WINDOW minus N"
N referring to NATHAN oregon HUSBANd)

JAYASALA 42

Read Entire Article