Purattaasi Sani

4 months ago 20
அது வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமை ஏழுமலையானுக்கு விசேஷ பூஜை செய்யும் வழக்கம் புராதனமானது.
அப்படி ஒரு புரட்டாசி சனியன்று சாமி கும்பிட அன்று அலுவலகம் விடுமுறை இருந்தால் ஸௌகரியமாக இருக்கும் என யோசித்த நம்மவர் ஒரு திட்டம் வகுத்து ஆங்கில மேலதிகாரியிடம் ஆங்கிலத்தில் ஒரு கோரிக்கை (ஆஃபீஸ் நோட்) சமர்பித்தார்.
அதிகாரி 'ஸீ பேக் & கோ ஃப்ரண்ட்' பாலிஸிபடி போன வருஷம் என்ன செய்தீர்கள் என வினவ, க்ஷண நேரத்தில் நம்மவர் சுதாரித்து சார், லாஸ்ட் இயர் தி புரட்டாசி சனி ஃபெல் ஆன் எ ஸன்டே ,என ஒரே போடாக போட்டார்.
அவ்வளவுதான், புரட்டாசி சனி ஹாலிடே ஸாங்ஷன்.
ஏழு கொண்டல வாடான்னா சும்மாவா...
கோவிந்தா கோவிந்தா.
Jayasala 42
Read Entire Article