எனது நீண்ட ஆசிரிய அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை இது: மாணவர்கள் இடையே இலக்கிய வகுப்பிற்குக் கிடைக்கும் வரவேற்பு, இலக்கணத்திற்கு கிடைப்பதில்லை. இலக்கணம் என்றதுமே முகத்தைச் சுளிப்பதும், எட்டிக்காயாய் நினைப்பதும் மாணவர்களின் பொதுவான இயல்பு.
என்றாலும், ஆசிரியர் முயன்றால் இலக்கண வகுப்பையும் இலக்கிய வகுப்பினைப் போல் சுவையாக மாற்றிவிட முடியும்.எளிய, இனிய, புதிய, நடைமுறை சார்ந்த உதாரணங்களைக் காட்டி, இலக்கணத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க வைக்க முடியும்; வகுப்பறையில் பதுமைகளைப் போல் வெறுமனே உட்கார்ந்தே இருக்காமல், உயிரோட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்ய இயலும்.
இலக்கணத்தை இனிமையாகவும், எளிமையாகவும் கற்பிப்பதற்கு கண்ணதாசனும், பட்டுக்கோட்டை -யாரும், மருதகாசியும் வாலியும் வைரமுத்துவும், பெரிதும் கை கொடுப்பர்.
'பசியட நிற்றல்' (பசி வருத்தவும் உண்ணாது இருத்தல்), 'கண்துயில் மறுத்தல்' (கண்கள் உறங்க மறுத்தல்) எனத் தொல்காப்பியம் கூறும் களவுக்காலக் காதலை கூட, கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகளைக் கொண்டு மாணவர்கள் புரிந்து கொள்ளுமாறு விளக்கலாம்:
'பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது!பஞ்சணையில் காற்று வரும் துாக்கம் வராது!'
அந்தாதி :அந்தம் ஆதியாக - ஓர் அடியின் முடிவே அடுத்த அடியின் தொடக்கமாக - தொடுப்பது 'அந்தாதி'. 'அந்தம்' என்றால் முடிவு; 'ஆதி'; என்றால் தொடக்கம். 'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' எனத் தொடங்கி 'பலே பாண்டியா' படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருக்கும் பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள் அந்தாதி நலம் பொருந்தியவை:'பார்த்து நடந்தால் பயணம் தொடரும்;பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்;கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்;காட்சி கிடைத்தால் கவலை தீரும்'கவலை தீர்ந்தால் வாழலாம்!'
'மூன்று முடிச்சு' படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்,
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள், நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்' என்ற முத்திரைப் பாடல் முழுக்க அந்தாதியில் அமைந்த அற்புதமான பாடல்.
அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும்: 'பாம்பு பாம்பு' என்பது அடுக்குத் தொடர்; 'பாம்பு' எனப் பிரித்தாலும் இது பொருள் தரும்.
'சலசல' என்பது இரட்டைக் கிளவி; 'சல' என்று பிரித்தால் இது பொருள் தராது. இதுதான் அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு.
இதனைக் கவிஞர் வைரமுத்து 'ஜீன்ஸ்' படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்படுத்தியுள்ளார்:'சலசல சலசல இரட்டைக்கிளவி; தகதக தகதக இரட்டைக்கிளவி; உண்டல்லோ... தமிழில் உண்டல்லோ?; பிரித்து வைத்தல் நியாயம் இல்லை; பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை; ஒன்றல்லோ... ரெண்டும் ஒன்றல்லோ?'
உவமை அணி :உவமை என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். தெரிந்த ஒன்றைக் கொண்டு, தெரியாத ஒன்றை விளக்கித் தெளிவுபடுத்துவதற்கும், அழகுணர்ச்சி தோன்ற ஒன்றை எடுத்துரைப்பதற்கும் இலக்கியங்களில் உவமைகள் கையாளப்படுகின்றன.'குடும்பத் தலைவன்' திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்: திருமணமாம், திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்! ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!... அவள் கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்! ஒரு கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்! மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக் காட்டுவார் கண்ணதாசன்:'சேர நாட்டு யானைத் தந்தம்போல் இருப்பாளாம்! - நல்லசீரகச் சம்பா அரிசி போலசிரித்திருப்பாளாம்!...செம் பருத்திப் பூவைப் போலக் காற்றில்அசைந்திருப்பாளாம்! செம் புச் சிலை போல உருண்டுதிரண்டிருப்பாளாம்! - நல்லசேலம் ஜில்லா மாம்பழம் போல்கனிந்திருப்பாளாம்!
இப்படி கருத்து வாய்ந்த திரைப்பாடல்களைக் கையாண்டு, தமிழ் இலக்கணத்தைக் கற்பித்தால், நம் வகுப்பறைகளில் மகிழ்ச்சி நிலவும்
--முனைவர் நிர்மலா மோகன். தகைசால் பேராசிரியர், காந்திகிராம பல்கலைக்கழகம் 94436 75931
Very absorbing method by Ms Nirmala Mohan.
Whatever beryllium the teaching method, lone funny children volition nexus the cinema notation with grammar rules and learn;For others lone the opus volition linger and not the grammar portion of it.
Playway maths person been tried for the past 50 years.But ,for the children without immoderate aptude, this excessively volition not pass.
Congrats to the prof for having taken truthful overmuch of inaugural to initiate Tamil Gramma.Even if 1 kid benefits, it is satisfying to the teacher.
JAYASALA 42