Anubavam Pesugirathu

1 week ago 6
  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages: 5,491 Likes Received: 10,717 Trophy Points: 438
    Gender: Female
    இலக்கியத்திற்காக வாழ்க்கையில் 13 ஆண்டுகளை விரயமாக்கியவன் நான். எப்படியும் பாடல் ஆசிரியர் ஆகிவிட வேண்டும். அதற்காக சென்னைக்கு போய் விட வேண்டும் என்று, இருந்த வேலையை விட்டுவிட்டு ,சென்னைக்கு போனவன் நான்.
    இது ஏற்கனவே சொல்லப்பட்டது , என்றாலும் என்றும் தேவைப்படக்கூடிய ஓர் அறிவுரையாக இதை இளம் படைப்பாளிகளுக்கு கூறிக் கொள்கிறேன்
    மனித வாழ்வு என்பது உங்களோடு முடிவது அல்ல. உங்களுக்கென்று குடும்பம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் இருக்கிறது. இவற்றையெல்லாம் உணர்ந்து
    இலக்கியம் என்பது உணவு போல மிக மிக அவசியமானது அல்ல என்ற கருத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் .
    இலக்கியவாதிகளால் வாசகனுக்கு சற்று மன ஆறுதல் கிடைக்கிறது. சிறிது நேரம் துன்பத்தை மறக்கிறார்,
    அல்லது ஒரு நாவலை வாசிக்கின்ற பொழுது அந்த ஒரு வாரம் அவன் கவலையற்று இருக்கிறான்.
    அவ்வளவுதான். இந்த கவலையற்ற நிலை என்பது ஓர் அநித்தியமான நிலை தான் .‌ நித்தியமான நிலை என்பது நிஜ வாழ்வில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள், சிக்கல்கள் ,வணிகத்தில் வீழ்ச்சி, எழுச்சி, விவசாயத்தில் வானம் பொய்ப்பது, பயிர்கள் அழிவது ,
    பிள்ளைகள் திருமண வாழ்வு செழிப்பது அல்லது சலிப்பது, என்று எத்தனையோ பிரச்சனைகள் நம்மை நெருக்குகின்றன .இவற்றிலிருந்து இலக்கியம் விடுதலை தந்து விடுகிறது என்று நினைப்பது ஒரு மாயை
    திரைப்படம் பார்க்கின்ற பொழுது அந்த பாத்திரங்கள் நம்மோடு வாழ்கின்றன .திரையை விட்டு வெளியே வந்த பிறகு நம்முடைய நிழல்தான் நம்மோடு வருகிறது.‌
    நம்முடைய வாழ்க்கை தான் நம்மோடு கூட வரும்.
    அந்தப் பாத்திரங்கள்,
    அந்தப் பாடல்கள், அந்த காட்சிகள் எல்லாம் பிம்பங்களாக மறைந்து போய் விடுகின்றன .
    கேமரா காட்டும் வாழ்வு அல்ல வாழ்வு . நம் அண்டை வீடுகளில் ,நம் வீதிகளில் நம் வீடுகளில் இருப்பது தான் நிஜமான வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்கு இலக்கியம் ஒரு சிறு புல்லைக் கூட கிள்ளி தராது என்பதை இளம் தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும்
    இலக்கியத்தை எவன் ஒருவன் உணவாக நினைக்காமல் உப்பாக நினைக்கின்றானோ அவன் மட்டுமே வாழ்வின் தன்னுடைய துறையில் வெற்றி பெறுவான்
    வெறும் வறட்டு தத்துவங்களால் ஒரு கோதுமையை விளைவித்து விட முடியுமா?
    ஒரு கவிதையால் நெற்பயிருக்குள் நெல்மணிகளை அடக்கி விட முடியுமா ?
    ஒரு சிறுகதையால் நம் தேவைக்கான ஒரு கனியை உற்பத்தி செய்ய முடியுமா ?
    ஆகவே இலக்கியம் என்பது சாகா வரம் பெற்றது என்பது அல்லது இலக்கியம் என்பது
    நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நடைமுறை அல்ல
    இலக்கியம் என்பது ஒரு பொழுதுபோக்கு தான். கொஞ்சம் பயனுள்ள பொழுதுபோக்கு. பயன் என்று நான் குறிப்பிடுவது வாழ்க்கைக்கு சல்லி காசுக்கும் பயன்படாது.‌
    நம் மனதுக்கு அந்த நேரத்தில் மயிலிறகாக விசிறிவிடும். அவ்வளவுதான்
    அந்த மயிலிறகு விசிறி அடுத்து நாம் சந்திக்கின்றோமே வாழ்க்கையின் சிக்கல்கள், சிண்டு சிடுக்கள் இவைதான் நம் கண் முன் விரியும் காட்சி .இவற்றை எவன் வெற்றி கொள்கிறானோ அவன் ஒரு இலக்கியவாதியை விட உயர்ந்தவன். மேலானவன்
    நமக்கும் வயிறு இருக்கிறது. நமக்கும் வாழ்க்கை இருக்கிறது .அதுபோக மிச்சம் இருக்கும் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் தான் இலக்கியம்
    ஆகவே இனி வரும் காலங்களில் இலக்கியத்திற்காக நான் குடிக்கிறேன் என்பது, என் வாழ்வினை அர்ப்பணம் செய்கிறேன் என்றோ நாட்களை கழித்தால் திரும்ப அந்த நாட்கள் வராது போய்விடும்
    வாழ்க்கை ஒரே ஒரு முறை பூக்கும் பூ. திரும்ப மலராது
    FORWARD RECD
    JAYASALA 42
    Similar Threads
    1. Rrg

  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages: 12,540 Likes Received: 13,241 Trophy Points: 615
    Gender: Male
    It looks similar vali.some different paras marque maine deliberation astir Jaganmohan. Last condemnation reminds of kannadasan .

    I hold with the conclusion. The scholar walk wealth to bargain successful people oregon walk wealth via net to work this but a writer to magazines for wealth marque usage of those lit . It whitethorn beryllium plagiarism oregon utilized successful adaptation successful different stories for a moving oregon for conscionable speechmaking pleasure.
    Late Karunanidhi wrote truthful overmuch successful Tamil lit published successful Tamil weeklies and cinema stories assertion helium made important riches lone from those writings.

    Kannadasan & wali excessively created wealthiness for themselves by authoring lyrics and articles.

Read Entire Article